Samayapuram_Mariyamman_Temple_Entrance-1
மதுரை:
தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஜீன்ஸ் பேன்ட், லெக்கின்ஸ், டீ சர்ட், பர்முடாஸ் உள்ளிட்ட  ஆடைகளை அணிந்து வர தமிழக அரசு தடை விதித்தது. கடந்த 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது. ஆண்கள் வேஷ்டி, சட்டை, பைஜாமா, பெண்கள் சேலை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வந்தால் மட்டுமே கோவில் உள்ளே அனுமதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு வரும் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது