a
லகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில்  அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு தனது பங்களிப்பாக திரைப்படபாடலாசிரியரும் கவிஞருமான தாமரை ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஹாரவர்டு பல்கலைக்கழகம், உலகப்புகழ் பெற்றதாகும்.  1636 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம்,   உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இங்கு தமிழுக்கு என்று இருக்கை அமைக்கப்பட உள்ளது. இப்படி அமைக்கப்படுவதால்  தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் சிறப்பாக நடக்கும், தமிழுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
ஹார்வர்டு பல்கலை கழக ஆராய்ச்சிகள் உலக  அளவில் அங்கீகாரம் பெறும். . இப்பல்கலையின்  முன்னாள் மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் என 47 பேர் கடந்த நூற்றாண்டுகளில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தமிழ் இருக்கை அமைய, ஆறு மில்லியன் டாலர் (சுமார் நாற்பது கோடி ரூபாய்)  தேவைப்படுகிறது.  .  அமெரிக்கத் தமிழர்களாகிய மருத்துவர்கள் ஜானகிராமனும் திரு திருஞான சம்பந்தமும் ஒரு மில்லியன் டாலர்களை அளித்திருக்கிறார்கள்.   மீதமுள்ள தொகையை உலகெங்கும் உள்ள தமிழர்களிடமிருந்து நன்கொடையாகப்பெற முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிதியை  திரட்ட ” தமிழ் இருக்கை இங்க் “ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், இருக்கை தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கிறது.    முதன் முதல் நன்கொடை அளித்தவர்களான  மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம்,  எழுத்தாளர் அ.முத்துலிங்கம், திருமிகு வைதேகி ஹெர்பர்ட் ஆகியோர் அடங்கிய ஆட்சிக்குழு, “தமிழ் இருக்கை இங்க்” அமைப்பை நிர்வகிக்கிறது.
இவர்களிடம் தமிழ் இருக்கைக்காக ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ளார் பாடலாசிரியர் தாமரை. இதுகுறித்து தாமரை கூறியதாவது:
“தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது, ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கான இருக்கை அமைக்கப்படுவதுதான்.
உலகில் அதிக அளவு பயன்படுத்தப்படும் இருபது மொழிகளில் தமிழும் அடக்கம்.  உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று ஆனால்,  உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதன் மூலம் இந்த குறை விலகும்.
அந்த இருக்கை அமைய,   என் பங்காக, என் குடும்பத்தின் சார்பில் ரூ ஒரு இலட்ச ரூபாய் அளிக்கிறேன். என் தந்தையாரின் நினைவு நாள் இந்த மாதம் வருகிறது.  அந்த நாளின் நிகழ்வுகளுக்காக ஏற்பாடு செய்திருந்த தொகையை இதற்குத் தருகிறேன். என் தாயாரும் ‘அப்படியே செய்’ என்று சொன்னார்கள். என் அண்ணன், தங்கை இருவரும் தந்தையாரின் நினைவாக இதைச் செய்யலாம் என்று உடனே சம்மதம் தெரிவித்தார்கள். ஈடுசெய்ய முடியாத எங்கள் இழப்பிற்கு இது ஒத்தடம் தருவதாக இருக்கிறது”  என்று கவிஞர் தாமரை தெரிவித்தார்.
மேலும் அவர், “பெருமைமிக்க இந்த இருக்கை அமையும்போது அதற்கான பங்களிப்பு உலகத்தின் அனைத்துத் தரப்புத் தமிழர்களிடமிருந்தும் வரவேண்டும், அனைவருக்கும் இந்த இருக்கையில் ஒரு பங்கு இருக்க வேண்டும். அவரவரால் முடிந்த தொகையை அளிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
நிதி அனுப்புவது எப்படி?
நிதியை நேரடியாக இணையம் மூலம் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கே அனுப்பலாம்.  அப்படி அனுப்பும் முறை:

  1. Double click on this linkhttps://www.generosity.com/…/harvard-university-s…/x/3630269
    2. DONATE NOW – click
    3. Change 50 to 70 or 100 or 500 or any amount and go down and click CONTINUE PAYMENT
    4. In the BOX given write your email and click CONTINUE PAYMENT
    5. Enter your name as it appears in your card, card number, expiry date, 3 digit number that is on the back of your card.
    6.Give billing address, city, state, zip code and click SUBMIT PAYMENT

மேலதிக விவரங்களை   எழுத்தாளர் அ. முத்துலிங்கம் மின்னஞ்சலில் கேட்டலாம்:  : appamuttu@gmail.com.  சென்னையில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்  ஆர். ஐயாதுரை அவர்களிடமும் தகவல் பெறலாம். அவரது செல்பேசி எண்:   9884021221