அஜித், சிறுத்தை சிவா
அஜித், சிறுத்தை சிவா

 

அஜீத் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளிவந்தது வேதாளம் திரைப்படம். “படம் பெரிய ஹிட்” என்று அறிவித்தார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம்.

ஆனால், பட இயக்குநர் சிவாவோ, “நல்ல வசூல்னு சந்தோசப்படுறாரு தயாரிப்பாளர் ரத்தினம். ஆனா எனக்கு தரவேண்டிய சம்பளத்தை ஒழுங்கா தரலியே” என்று நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.

 

ஏ,எம். ரத்தினம்
ஏ,எம். ரத்தினம்

“தனது டெக்னீஷியன்கன் யாருக்கும் சம்பள பாக்கி இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அஜீத். அவரிடம் இது குறித்துச்சொல்லுங்கள்” என்று சிவாவின் நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்ய…

“இந்த விசயத்தை தல கிட்ட கொண்டு போனா, நிச்சயம் சம்பளத்தை வாங்கித்தந்திடுவார். ஆனால் அவருக்கு டென்சனை உருவாக்க விரும்பலை” என்கிறாராம் சிவா.

இதற்கிடையே

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தனது மகன் ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்க இருக்கும் புது படத்துக்கு பூஜை போட்டுவிட்டார்.

தட் ஈஸ் சினிமா!