கொல்கத்தா

ணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோவின் கொல்கத்தா ஊழியர்கள் பன்றிக் கறி மட்டும் மாட்டுக் கறியை வழங்க மறுத்துள்ளனர்.

பாஜக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு பசுவைக் கொல்ல நாடெங்கும் தடை விதித்தது.   அதைத் தொடர்ந்து மாட்டுக்கறி விவகாரம் பெரிதாகியது.    பல மாநிலங்கள் மாட்டுக்கறி உண்பதற்கு ஆதரவு அளித்தன.   அதில் மேற்கு வங்க மாநிலமும் ஒன்றாகும்.  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தமது மாநிலத்தில் மாட்டுக்கறி உண்ண தடை இல்லை என தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கே வந்து உணவு வழங்கும் நிறுவனமான ஸொமடோ நிறுவன ஊழியர்களில் பலரை நிறுவனம் அசைவ உணவுகளை வழங்க வேண்டும் என கூறி உள்ளது.  இந்நிலையில் பன்றிக் கறி மட்டும் மாட்டுக் கறி  உணவுகளை எடுத்துச் சென்று அளிக்க இந்நிறுவன  ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதையொட்டி வீதியில் இவர்கள் போராடி உள்ளனர்.

போராட்டம் செய்து வரும் ஊழியர்கள், ”இந்து ஊழியர்கள் மாட்டுக்கறி உணவை அளிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.  அதே நேரத்தில் இஸ்லாமிய ஊழியர்கள் பன்றிக் கறி உணவை அளிக்க மறுக்கின்றனர்.   எங்கள் மத உணர்வுகளை ஸொமடோ நிறுவனம் சிறிதும் மதிக்காமல் நடந்துக் கொள்கிறது.  அதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

ஸொமடோ நிறுவனம் ”பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டில் சைவம், அசைவம் எனப் பிரித்து வழங்க முடியாது.  உணவு அளிக்கும் ஊழியர்கள் தங்கள் பணி குறித்து அறிந்து செயல்பட வேண்டும். பல ஊழியர்கள் இதை ஒப்புக கொண்டுள்ளனர்.  கொல்கத்தாவில் பணி புரியும் ஒரு சிறு குழு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.   விரைவில் அது சரி செய்யப்படும்” என தெரிவித்துள்ளது.