ஜாகிர்நாயக் தலையை துண்டித்தால் ரூ50 லட்சம் பரிசு! : சாத்வி பிராச்சி சர்ச்சை பேச்சு

Must read

டில்லி:
ர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தலையை துண்டித்தால் ரூ50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்லும் விடுதி ஒன்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத மோதகர்  ஜாகிர் நாயக் பேச்சால்  ஈர்க்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

ஜாஹிர் நாயக் - பிராச்சி
ஜாஹிர் நாயக் – பிராச்சி

இதையடுத்து  ஜாகிர் நாயக்கின் மத பிரச்சார பேச்சுக்கள்  குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  அதே நேரம், தன்  மீதான விமர்சனங்களுக்கு ஊடகங்கள் மூலம் நாளை பதிலளிக்க உள்ளதாக ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி, “நாட்டை துண்டாட நினைக்கும் ஜாகிர் நாயக்கின் தலையை துண்டிக்க வேண்டும். அப்படி துண்டிக்கும் நபருக்கு ரூ50 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று பேசியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

More articles

Latest article