
பட்டியலின மக்கள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிக் பாஸ் பிரபலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு சரமாரியான எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, யுவிகா செளத்ரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நடிகை யுவிகா செளத்ரியை ஹரியானா போலீசார், நேற்று கைது செய்தனர். பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் யுவிகா.
Patrikai.com official YouTube Channel