Bigg Boss Tamil 5: ஹவுஸ் மேட்ஸை குழப்பும் அபிஷேக்….!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், கதை சொல்லட்டுமா டாஸ்கின் போது நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு ஆக்டிவிட்டி ஏறியாவிற்கு வந்தவர்கள் அடிப்படையில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த வீட்டில் ஜொலித்தவர் யார் என்ற தேர்வு நடைபெற்றதில் இமான் வெற்றி பெற்றதால் அவரும் இந்த டாஸ்கில் பங்கேற்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

https://twitter.com/i/status/1450318317323833350

முதல் ப்ரோமோ : வீட்டில் விலை மதிப்பற்ற 5 நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை திருடுபவர்கள், இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே எலிமினேஷனில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு, போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த டாஸ்கை செய்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோ ; தாமரை செல்விக்கு ஆதரவாக அபிஷேக், பிரியங்கா மற்றும் ராஜு பேசுகின்றனர். முதலில் தாமரையிடம் பேசும் அபிஷேக் உங்களுக்காக தான் நாங்கள் இதனை செய்கிறோம் என கூற, தாமரை அவரது காலில் விழுந்து நீங்கள் கூறியதே போதும் என அழுகிறார். பின்னர் இமான், ராஜுவிடம் நீங்கள் யாரை காப்பாற்றப்போகிறீர்கள் என கேட்க, அதற்கு ராஜு, நான் தாமரையை காப்பாற்றப்போகிறேன் என்கிறார். இதனை தொடர்ந்து பிரியங்காவும், தாமரையை காப்பாற்றுவேன் என கூற இமான், ஏன் எல்லாரும் தாமரையை மட்டும் கூறுகிறீர்கள், சின்ன பொண்ணுவை கூறவில்லை என கேட்கிறார்.

https://youtu.be/IE7ydJwMpzQ

மூன்றாவது ப்ரோமோ : சிபி மற்றும் அபிஷேக் இடையே பிரச்சனை ஏற்படுவது தெரிகிறது. எந்த ஒரு டாஸ்க் கொடுத்தாலும் அதில் ஸ்டேட்டர்ஜி பயன்படுத்தி அபிஷேக் விளையாடி வருகிறார். ஏற்கனவே அவர் பேசுவது பிடிக்கவில்லை என சிபி இந்த வாரம் அபிஷேக்கை நாமினேட் செய்துள்ள நிலையில், சிபி – அபிஷேக் இடையே மோதல் ஏற்படுவது ப்ரோமோவில் தெரிகிறது.

 

More articles

Latest article