திருநெல்வேலி:  
“தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலவர் யுவராஜை கொலை செய்ய சதித்திட்டமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டம்  ஒமலூரை சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ்  கொலை வழக்கில், “தீரன் சின்னமலை கவுணடர் பேரவை” தலைவர் யுவராஜ் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் விடப்பட்டுள்ள அவர் தற்போது நெல்லையில் தங்கி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
Watch-Yuvraj-Surrender-Arrest-on-Gokulraj-Murder-Case-Live-Video-online-11-10-2015-Yuvaraj-Arrest-Youtube-Video
அவர் தாக்கப்பட  வாய்ப்பு உள்ளதாக  காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யுவராஜை அவரை தாக்க திட்டம் தீட்டியதாக, விடுதலை சிறுத்தை கட்சியின்  நிர்வாகியான நெல்லை சந்திரசேகரன் மற்றும் கீழபாட்டம்  முத்துராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.