ஒரிசா மாநிலத்தின் மயூரபாஞ் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய ஒருவகை சிகப்பெரும்பு சட்னிக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

மயூரபாஞ் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த உணவு வகையை “சிமிலிபால் காய் சட்னி” என்று அழைக்கிறார்கள்.

விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த இந்த சிகப்பு எறும்பு சட்னி ஞாபகமறதி உள்ளிட்ட மூளை தொடர்பான வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

மயூரபாஞ் மற்றும் சிமிலிபால் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கிடைக்கக்கூடிய ஒரு வகை சிகப்பு எறும்பு மற்றும் அதன் முட்டையை சேகரித்து இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அம்மி கல்லில் அரைத்து சட்னி போல் இதை தங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர்.

இந்த “சிமிலிபால் காய் சட்னி”க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதை அடுத்து ஒரிசா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.