இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது கட்டமாக ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூர் முதல் மும்பை வரை மற்றொரு யாத்திரை நடத்தப்பட உள்ளது.

ஜனவரி 14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் துவங்கவுள்ள இந்த யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக 66 நாட்களில் சுமார் 6700 கி.மீ. தூரம் பயணிக்கிறது.

சமூக நீதி, பொருளாதார மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான இந்த நீதி யாத்திரையில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

யாத்திரை செல்லும் பாதையின் அருகில் வசிப்பவர்கள் ராகுல் காந்தி தலைமையிலான குழுவுடன் இனைந்து நடந்து செல்லலாம் அல்லது bharatjodonyayyatra.com என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமோ அல்லது 9891802024 என்ற மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமோ இந்த நீதிக்கான போராட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தவிர, இணையத்தளம் வாயிலாக காங்கிரஸ் கட்சி சார்பில் துவங்கப்பட்டுள்ள ‘தேசத்திற்காக நன்கொடை’ முயற்சியில் பங்களிப்பதன் வாயிலாகவும் பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளது.