இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் மூவி என்று யுத்த காண்டம் படத்தை அறிவித்துள்ளனர்.
1976 லேயே சிங்கிள் ஷாட் திரைப்படத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 1982 இல் வெளியான, 57 நிமிடங்கள் ஓடக்கூடிய மெக்பத் திரைப்படம் ஒரு சாம்பிள் எனலாம் .
2002 இல் அலெக்ஸாண்டர் சுக்ரேவ் இயக்கத்தில் வெளியான ரஷ்யன் ஆர்க் திரைப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.
2015 இல் வெளியான ஜெர்மன் திரைப்படமான விக்டோரியா சிங்கிள் ஷாட் திரைப்படங்களில் முக்கியமானது.
இந்நிலையில் இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் மூவி என்று யுத்த காண்டம் படத்தை அறிவித்துள்ளனர். நடிகர்கள் உள்பட 100 தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில் இந்தப் படம் தயாராகியுள்ளது.
குமரன் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். பாரடைஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. பல விருதுகளையும் வாங்கியுள்ளது.