கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சமந்தா கடந்த புதன்கிழமை ஒரு கால்நடை மருத்துவ மனையில் தனது நாய்களுடன் காணப்பட்டார்.

சாதாரண வெள்ளை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து, சமந்தா கிளினிக்கில் காத்திருந்தார். சமந்தா தனது நாய்களுக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் அடிக்கடி தனது செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடுகிறார்.