டில்லி

ர்நாடகா மாநில அதிருப்தி எம் எல் ஏ க்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனு அளிதுள்ளர்.

கர்நாடகா மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதை கலைக்க பாஜக முயலுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுவதும் அதை பாஜக மறுப்பதும் வழக்கமாகி வருகிறது.  சமீபத்தில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.   இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை.   அதையொட்டி அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அதிருப்தி உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நேற்று சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்த அதிருப்தி உறுப்பினர்களிடம் அவர் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை என தெரிவித்துள்ளார்.  அத்துடன் முறையாக ராஜினாமா கடிதம் அளிக்க வேண்டும் எனவும் அவர்களிடம் ரமேஷ்குமார் கூறி உள்ளார்.   இன்று வரை இந்த குழப்பம் நீடித்து வருகிறது.

இன்று கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் ”அதிருப்தி  உறுப்பினர்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்.  இந்த உறுப்பினர்களின் ராஜினாமாவின் பின்னால் கட்சி தாவல் உள்ளது.  இதற்காக நிறைய பணம் கொடுத்து இவர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளார்.