நீங்கள் பேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை உலகில் தீர்மானிப்பதாக இருக்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தின் இன்றைக்கு திரைத்துறை தொடர்பான கல்லுரிகளில் பயில்வதற்கான கட்டணம் அதிக அளவில் இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட தரப்பு மட்டுமே அவற்றை பயின்றிட முடியுமே தவிற, இன்னும் 10 ஆண்டுகள் கழிந்தாலும், போதிய நபர்கள் துறையில் இருக்கமாட்டார்கள்.

அசுரன் திரைப்படத்தை நான் முடித்த விதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ஆனால் மக்கள் அதை விரும்புகிறார்கள். அந்த படம் நிறைய பணத்தை எனக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. ஆனாலும் அதை முடிக்க வேண்டிய விதத்தில் முடிக்க முடியாதது இன்னும் வருத்தத்தையே கொடுக்கிறது. 22 நாட்கள் ஷூட்டிங் முடிய இன்னும் காலம் இருந்த நிலையில், மொத்தமாக 40 நாட்களுக்குள் படத்தை திரையிட வேண்டும் என்று எனக்கு தெரிவித்தார்கள்.

நான் பேசும் விதம் தான் இந்த உலகத்தை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதை உணர்த்துகிறது. எஸ்கிமோ மொழியில் பனிக்கு 16 வார்த்தைகள் உள்ளன. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது. தமிழில் இலைக்கு 6 வகைகள் உள்ளன. உங்கள் புவியியல் நிலை மற்றும் நீங்கள் பேசும் மொழி மட்டுமே உங்கள் கருத்து எத்தகையது என்பதை தீர்மானிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.