முசோரி

முசோரிக்கு செல்லும் இளைஞர்களுக்கு பெற்றோர் அனுமதி இல்லை எனில் பயணிக்க காவல்துறை மறுக்கின்றனர்

முசோரி காவல் துறையில் புதிதாக காவல்நிலைய தலைமை அதிகாரியாக பாவ்னா கைந்தோலா என்னும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த நகரில் முதல் பெண் காவல்துறை அதிகாரியான இவர் தற்போது பல மாறுதல்கள் செய்துள்ளார்.   அதில் ஒன்று முசோரி வரும் இளைஞர்களை அந்நகரின் நுழைவாயிலில் பரிசோதிப்பது ஆகும்.

உத்தர்காண்டில் புகழ்பெற்ற மலைவாழ் சுற்றுலாத்தலம் முசோரி.   இங்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்     அதிலும் இளைஞர்கள் அதிகம் வருகின்றனர்.    அவர்கள் இந்த நகரில் நுழையும் முன்பு நிறுத்தப்பட்டு அவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பயணிக்கிறார்கள் என்பதை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.    அவ்வாறு அனுமதியை அவர்களால் தர இயலவில்லை எனில் நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுகின்றனர்.

இந்த உத்தரவை பிறப்பித்துள்ள அதிகாரி பாவ்னா முசோரி நுழைவாயிலில் நான்கு காவலர்களை நிறுவி உள்ளார்.    இது குறித்து அவர், “நாங்கள் நான்கு கூடுதல் பாதுகாவலர்களை நியமித்துள்ளோம்.   சட்ட விரோத நடவடிக்கைகளில் இங்கு வரும் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்கவும்,  இளைஞர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த காவலர்கள் இதை செய்து வருகின்றனர்.    அது மட்டுமின்றி மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கவும் மேலும் பல சோதனைச் சாவடிகளை நிறுவி உள்ளோம்.”  எனக் கூறி உள்ளார்.

இந்த நடவடிக்கை இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.    இது குறித்து சில இளைஞர்கள், “காவல்துறையினரின் இந்த சோதனை தேவை அற்றது.   அவர்களுக்கு வாகனங்களில் உள்ள ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம் போன்றவைகளை சோதிக்க மட்டுமே உரிமை உள்ளது.    இவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களை இது போல் சோதிக்கலாம்.   ஆனால் 19 வயதை தாண்டியவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல இந்த நடவடிக்கை உள்ளது”  எனக் கூறி உள்ளனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவதால் மாநிலத்தில் சுற்றுலா வருபவர்கள் மிகவும் குறைந்து விடுவார்கள் எனவும் சுற்றுலாப் பயணிகளை நம்பி உள்ள வர்த்தகர்களும்,  ஊழியர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.