சென்னை:
ஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள என இரண்டு பெண்களை மீட்டுத்தாருங்கள்ள என்று சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண்களின் தாயார் சத்தியவதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளளார்.
கோவையை சேர்ந்தவர் காமராஜ். பேராசிரியர். இவரது மனைவி சத்யவதி.. இவருக்கு 2 மகள்கள். இருவரும் பொறியியல் பட்டதாரிகள். இருவரும் ஈஷா யோகா மையத்தில் அடிமையாக இருக்கிறார்கள், அவர்களை மீட்டுத் தாருங்கள் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர்.

இளம்பெண்கள் கீதா, லதா
இளம்பெண்கள் கீதா, லதா

இதையடுத்து மாவட்ட எஸ்பி, ரம்யா பாரதி, இரு பெண்களிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, தாங்கள் விரும்பியே சன்னியாசியம் பூண்டதாக அந்த பெண்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஈஷா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து ஈஷாவில் தங்கி இருக்கும் இளம்பெண்கள் இருவரும், தாங்கள் அங்கேயே தங்க விரும்புவதாகவும், பெற்றோருடன் இருக்க விரும்பவில்லை என்றும் தன்னிலை விளக்கம் அளித்தனர்.
இதன் காரணமாக, ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்களை, ஜக்கி வாசுதேவ் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, அப்பெண்களின் தாயார் சத்யவதி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், தனது மகள்கள்  கீதா மற்றும் லதா ஈஷாவில் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை சந்திக்க, பேசுவதற்கெல்லாம், பெற்றோருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும், தங்களது புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு
மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

இந்த மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதிகள், நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீது இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராஜேந்திரனிடம், புகார் பற்றி நீதிபதிகள் கேட்டபோது, கோவை காவல்துறையிடமிருந்து ஈஷா பற்றி தவறான எந்த தகவலும், அரசுக்கு வரவில்லை என கூறினார்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், லதா, கீதா ஆகியோர் தாங்களே விருப்பப்பட்டு கூட சன்னியாசிகளாக மாறியிருக்கலாம். ஒருவேளை அப்படி விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இரு பெண்களும் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதை உறுதி செய்துகொள்ள, கோவை மாவட்ட நீதிபதி, அந்த இரு பெண்களிடமும் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இன்று மதியம் 3 மணியளவில், கீதா, லதா ஆகிய இரு பெண்களிடமும், கோவை மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தி, அவர்களின் கருத்தை கேட்டறிய வேண்டும். அப்போது நீதிபதிக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மாவட்ட நீதிப அந்த இரு பெண்களிடமும் விசாரணை நடத்தி, அது பற்றிய  விசாரணை அறிக்கையை, நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் தங்களது மகள்கள் மட்டுமின்றி வேறு, பல ஆண்களும், பெண்களும் கட்டாயப்படுத்தி ஈஷாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். அப்படியிருப்பின், அதுதொடர்பாக என்னென்ன புகார்கள் இருந்தாலுலும்,  அத்தனையையும் மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.