அடுத்த ஐன்ஸ்டீன் என்று ஹார்வேர்ட் பல்கலை கழகத்தால் புகழப்படும் சப்ரினா பாஸ்தர்ஸ்கி கார் ஓட்ட தொடங்கும் முன்னரே சொந்தமாக விமானத்தை உருவாக்கி பறந்தவர். இவரது சம வயதினர் அடிமைப்பட்டு கிடக்கும் சமூக வலைதளங்களில் இவருக்கு துளியும் ஆர்வம் கிடையாதாம். ஆனால் www.physicsgirl.com என்ற ஒரு இணையதளத்தை நடத்தி அதில் தனது அதிசய கண்டுபிடிப்புகளைப் பற்றி பகிர்ந்து வருகிறார்.

sabrina

சப்ரினா பாஸ்தர்ஸ்கி 1993 ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்தவர். 2006 ஆம் ஆண்டு தான் சொந்தமாக உருவாக்கிய விமானத்தை இயக்கி சாதனை படைத்தார். தற்சமயம் ஹார்வேர்ட் பல்கலையில் தனது முனைவர் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். தனது 12 வயதில் விமானத்தை உருவாக்க ஆரம்பித்திப்பவர் அந்த அனுபவம் கற்றுத்தந்த பாடத்தை பாடப் புத்தகங்களால்கூட கற்றுத்தர இயலாது என்கிறார்.
சப்ரினா தற்போது கருந்துளைகள் மற்றும் குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் நாட்டம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.