சென்னை: நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் செருப்பு வீசியர் கைது செய்யப்பட்டு உள்ளார். செருப்பு வீசியர் புகைப்படம் வைரலான நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா இன்று(பிப்.26) மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நேற்று அவரது விட்டில், நடிகர் விஜய், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை தனது காதில் வைத்து செல்ஃபோனில் பேசுவது போல சைகை காட்டிவிட்டு விஜய்யின் வீட்டிற்குள் வீசினார். அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதற்கிடையில், செருப்பை வீசி நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதாக ஒரு தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டவர் எப்படி ஒரு தலைவர் வீட்டை சரியாக பார்த்து செருப்பை வீசினார் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
இநத் நிலையில், விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி செருப்பு வீசியவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதையில் விஜய் வீட்டிற்குள் செருப்பை வீசியதாக தகவல். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.