தன்னந்தனியாக ஹனிமூன் சென்ற இளம் பெண்

மிகக் கஞ்சன் ஒருவன், செலவைக் குறைக்க தனியாக ஹனிமூன் சென்றதாக ஒரு கதை உண்டு. ஆனால் நிஜத்திலேயே அப்படி ஒரு பெண் சென்றிருக்கிறார். ஆனால் இவர் சென்றதுக்குக் காரணம், கஞ்சத்தனம் அல்ல.

பிறகு..?

இவர் திருமணம் செய்துகொண்டது இவரைத்தான்.அதிர்ச்சியாக இருக்கிறதா..?

மேலே படியுங்கள்.

இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் லாரா மெஸ்ஸி. இவர் தனக்கு ஏற்ற கணவரைத் தேடிக்கொண்டே இருந்தார். மனதுக்கு  ஏற்ற மணாளன் கிடைக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போனவர், தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தார்.

அதுவும் ஊரைக்கூட்டி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.

திருமண விழாவை ஏற்பாடு செய்தார்.  தனக்கு வேண்டிய 70 பேரை விருந்தினராக  அழைத்த்தார்.  திருமண உடையான தேவதை ட்ரஸை அணிந்துவந்தார். தனக்குத்தானே மோதிரம் மாற்றிக்கொண்டார்.

எல்லாம் முடிந்ததா..

இப்போது  எகிப்து நாட்டுக்கு ஹனிமூன் கிளம்பிவிட்டார்… ஆம், தனியாக!

கேட்டால், “நான் என்னைக் காதலிக்கிறேன்.. நான் என்னையே திருமணம் செய்துகொண்டேன்” என்கிறார்.
English Summary
young-girl-go-to-honeymoon-alone