டெல்லி: கொரோனா தடுப்பூசியை  இலவசமாக செலுத்த மக்களே குரல் எழுப்புங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சற்றே  குறையத் தொடங்கினாலும், கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்படும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசுகள் தீவிரமாக்கி உள்ளது. பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால், நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. இதற்கு மத்தியஅரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 21.85 கோடி பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

கொரோனாவை வெல்வதற்கான வலுவான ஆயுதம் தடுப்பூசி

இந்திய மக்களுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு முன்வரவேண்டும்

மேலும் நாட்டு மக்கள் அனைவரும் இலவச தடுப்பூசிக்காக  குரலெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர்,

#SpeakUpForFreeUniversalVaccination எனும் ஹேஸ்டேக்கில் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் எனவும் கூறியுள்ளார்.

https://twitter.com/i/status/1399943800827518976