‘போஸ்ட் இன்ஃபோ’ செயலி மூலம் முகக்கவசம், மருந்துகளும் பெறலாம்… அஞ்சல்துறை அசத்தல்

Must read

சென்னை:

ரடங்கால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள மக்கள், தங்களுக்கு தேவையான முகக்கவசம், மருந்துகள் போன்ற வற்றை வீடுகளிலேயே இருந்து பெறும்  வகையில்  போன்ஸ் இன்போ செயலியை மேலும் புதுப்பித்து உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசால் அஞ்சல்துறையின் பயன்பாட்டுக்காக Post Info App  அறிமுகப்படுத்தப் பட்டது. இதன்மூலம் அஞ்சலக வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதிச்சேவைகள், உட்பட அனைத்து அஞ்சல் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். உள்பட பல்வேறு விவரங்கள் தெரிந்துகொள்ளும் வகையில்  உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த செயலில் மேலும் புதுப்பிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முகக்கவசம், மருந்துகள் போன்றவற்றையும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து   அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆண்ட்ராய்டு மொபைல் பயன்பாடு ‘போஸ்ட் இன்ஃபோ’. இதனைப் பதிவிறக்கம் செய்த பின்பு தேவையான கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின்னர், கோரிக்கையின் நிலையை அறிய பயனருக்கு ஒரு தனித்துவமான குறிப்பு எண் உருவாக்கப்படும்.

அதன் பின்னர் மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்படும்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான இச்செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்”

அஞ்சல் துறையின் அலைபேசி செயலி ‘போஸ்ட் இன்ஃபோ’ அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்திலுள்ள – இல்லங்களில் இருந்தபடியே அஞ்சல் சேவை பெறுவதற்கான அவசரத் தேவை – இணைப்பு மூலம், இந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

நேரடியாக இந்த இணைப்பின் URL மூலமாகவும் இந்த சேவையை பெறலாம் http://ccc.cept.gov.in/covid/request.aspx

இதுகுறித்து கூறிய அந்திய அஞ்சல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர்,  ஊரடங்கு காலத்தில்,  வழக்கமான சேவைகளைத் தவிர, மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்துகள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கி வருகிறோம். முகக் கவசம், மருந்து ஆகியவற்றைப் பெற ஆண்ட்ராய்டு செயலியும் இந்திய அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலியின் வழியே ஆர்டர் செய்தும் தங்களுக்குத் தேவையான மருந்துகளையும் முகக்கவசகங்களையும் பயனர்கள் சிரமமின்றிப் பெறலாம்.

மேலும்,  வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article