க்னோ

பாராளுமன்ற இடைத்தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் இரு இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்ததை ஒட்டி மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்றா உத்திரப் பிரதேச பாராளுமன்றத்தின் இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றாது.   ஆரம்பத்தில் இருந்தே சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் இருந்து வந்தது.   முக்கியமாக முதல்வர் யோகியின் கோட்டை எனக் கூறப்படும் கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வியுற்றது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், செய்தியாளர்களிடம், “மக்களின் தீர்ப்பு இது.  இதை தலை வணங்கி வரவேற்கிறேன்.   வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.    நாங்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தது எங்களின் முதல் தவறு.  இரண்டாவது தவறானது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டது ஆகும்.

வேட்பாளர்கள் அறிவிப்பு முடிந்த பிறகு சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி வைத்ததால் நாங்கள் அதன் தாக்கம் தேர்தலில் இருக்காது என எண்ணி விட்டோம்.    இந்த கூட்டணியால் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.   உள்ளூர் பிரச்னைகளின் காரணமாகவே எங்களுக்கு இந்த தோல்வி கிடைத்துள்ளது.   இதற்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை”  என தெரிவித்துள்ளார்.