யோத்தி

கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சமூக நல நிதிகளைப் பெற்று 100 மீட்டர் உயரம் உள்ள ராமர் சிலையை அயோத்தியில் அமைக்க யோகி ஆதித்யநாத்தின் உ.பி  அரசு திட்டமிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச பாஜக அரசு அயோத்தியில் 100 மீட்டர் உயரத்தில் ஒரு ராமர் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளது.   சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த சிலையை அமைக்க சுமார் ரூ,330 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.   அத்துடன் ராமயணக் கண்காட்சி, ராமரின் வரலாறு குறித்த ஒலி ஒளிக் காட்சி மற்றும் நடனமாடும் நீரூற்று ஆகியவைகளும் அமைக்கப் பட உள்ளன.   இந்த இரு திட்டங்களுக்கான நிதியை திரட்ட அரசு பல திட்டங்கள் தீட்டி உள்ளது.

அதில் ரூ.2275 கோடி செலவில் 86 சுற்றுலா மையங்கள் திறந்துள்ளன.   வாரணாசி மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 10 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா மையங்களில் பல கார்பரேட் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன.   அந்த நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் 2% தொகையை சமூக நல நிதியாகப் பெற்று அந்த பணத்தின் மூலம் மேலே சொல்லபட்ட இரு திட்டங்களையும் யோகி அரசு நிறைவேற்ற உள்ளது.

இது குறித்து உ.பி. சுற்றுலாத்துறை தலைவர் அவனிஷ் குமார் அஸ்வதி, “ராமர் பக்தர்களிடையே அயோத்திக்கு தனி முக்கியத்துவம் உண்டு.  அயோத்தியை சர்வ தேச சுற்றுலா மையமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.   அத்துடன் முதல்வர் ஆதித்யநாத் இன்னும் தலைமை அர்ச்சகர் பொறுப்பில் உள்ள கோரக்நாத் கோவிலையும் சுற்றுலாத் தலமாக மாற்றப்படு உள்ளது.   இது போல மீதமுள்ள இடங்கள் குறித்தும் உடனடியாக சுற்றுலா மையம் ஒரு கையேடு அமைத்துக் கொண்டு உள்ளது.  விரைவில் அந்தக் கையேடு வெளியிடப்படும்.”  என தெரிவித்துள்ளார்.