லக்னோ:

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. மாநில பாரதியஜனதா அரசு, அம்பேத்கர் பெயர் குறித்து புதிய உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி பீம்ராவ் அம்பேத்கர் என்ற பெயர், இனிமேல் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்’ என அழைக்கப்படவும், எழுதப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் அனைத்து ஆவனங்களிலும் இனிமேல், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பெயரின் நடுவில், ‘ராம்ஜி’ என்ற பெயரைச் சேர்க்க வேண்டும் என  அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, லக்னோ மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றத்திலும்  இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், நீதிமன்ற ஒப்புதலை பெற்றே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்தே,  அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற புதிய பெயரை நடுவில் சேர்க்க முடிவானதாகவும், இதில் ராம்ஜி என்பது அம்பேத்காரின் தந்தை பெயர் என்றும் கூறப்படுகிறது.

இந்த பெயர் மாற்ற  உத்தரவு உடடினயாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.