டிகர் யோகிபாபு தற்போது கோலி வுட்டில் போட்டிக்கு ஆளே இல்லாமல் சோலாவாக காமெடி வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சில படங் களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். ஆனால் அவர் பிரபலமாவதற்கு முன் ஒரு சில படங் களில் இரண்டு சீன் மூன்று சீன்களில் நடித்திருக்கி றார். அதில் சில படங்கள் வெளியாகாமல் பெண்டிங்கில் இருக் கிறது. தற்போது யோகிபாவுக்கு உள்ள மவுசை பயன்படுத்தி அவர் நடித்துள்ள பழைய படங்களை அவரை பிரதானமாக நடித்திருப்பதுபோல் பில்டப் செய்து விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் படத்தில் அவரதுகாட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே இருப்பதால் ரசிகர் ஏமாற்றம் அடைகிறார்கள்.
அதுபற்றி நேற்று கருத்து தெரிவித்திருந்த யோகிபாபு இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில், ’சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப் பேன். இப்போது என்னுடைய புகைப் படத்தை தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.
எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடு கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் தியேட்ட ருக்கு சென்றோம். ஆனால், 2 – 3 காட்சி களில் தான் வருகிறீர்கள் என்று சொன் னார்கள். இதனால் எனக்கு மனவேதனை யாக இருக்கிறது. இடையே ‘தெளலத்’ என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யா தீர்கள்.
நான் முழுமையாக நடித்திருந்தால் போட லாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சி களுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. 2-3 சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென் றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்.
இவ்வாறு வீடியோவில் கூறி உள்ளார்.