லக்னோ
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளை பன்றிகளோடும் கழுகுகளோடும் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வந்த கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (பிப்.26) நிறைவடைகிறது. எனவே இன்று உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அயோத்தி தாம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்.பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,
“கும்பமேளாவில் தேடி வந்த எல்லோருக்கும் ஏதோ ஒன்று கிடைத்தது. கழுகுகள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன, பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது, உணர்வுப்பூர்வமான மக்களுக்கு தங்கள் உறவுகளுடன் அழகான நினைவுகள் கிடைத்தன, நேர்மையானவர்களுக்கு நன்மை கிடைத்தது, பக்தர்கள் கடவுளை கண்டனர்.
மகா கும்பமேளாவின் மகத்துவத்தை அவமதிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள், இது அவர்களின் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது. அவர்களின் கருத்துக்கள் மகா கும்பமேளா மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைக்கு அவமானம்
கடந்த ஒன்றரை மாதங்களாக, இடதுசாரிகளும் சோசலிஸ்டுகளும் இந்த நிகழ்வை பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி, கற்பனையான அழுக்கு, ஒழுங்கின்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த எல்லாவற்றையும் செய்தனர், மேலும் அவர்களின் சித்தாந்த பிரச்சாரம் களத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை
கங்கை மற்றும் யமுனை சங்கமத்தில் புனித நீராடுவதன் மூலம் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் சனாதன தர்மத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். நாட்டின் ஆன்மீக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ஒரு மைல்கல்லை அமைத்துள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.