சினிபிட்ஸ்:  டென்த் பொண்ணு மேக்னாவை காதலிக்கிறாராம் +2 கிஷோர்!

Must read

  0015
கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட ஏராளமான  படங்களில்  நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் படம், “எதிர் கொள்”.
இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக C.பழனி, R.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்   ஆர். அய்யனார்
இந்த படத்தில் கிஷோருக்கு ஜோடியாக மேக்னா நடிக்கிறார்.   மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர் என பலரும் படத்தில் இருக்கிறார்கள்.

மேக்னா
மேக்னா

 
படம் பற்றி இயக்குனர் அய்யனாரிடம் கேட்டோம்:
“இது  முழுக்க முழுக்க,  கிராமத்து கதை.      பன்னிரண்டாம் வகுப்பு மாணவனுக்கும், பத்தாம் வகுப்பு மாணவிக்குமான காதல்தான் கதை.  அதே நேரம்,    ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம் இது.  அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை  சொல்கிறோம்.
பொறுப்பில்லதவனாக கருதப் பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி  பெரிய மனிதனாக உயர்கிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம்” என்றார் இயக்குநர் அய்யனார். 
நல்லதை, நல்லவிதமாகச் சொன்னால் சரிதான்!
 

More articles

Latest article