டில்லி

ந்தியாவில் நேற்று 34,861 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,91,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,861 அதிகரித்து மொத்தம் 3,12,91,704 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 481 அதிகரித்து மொத்தம் 4,19,502 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 38,393 பேர் குணமாகி  இதுவரை 3,04,60,304 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,99,489 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 7,302 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,45,057 ஆகி உள்ளது  நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,31,038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,756 பேர் குணமடைந்து மொத்தம் 60,16,506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,168 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,818 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,18,015 ஆகி உள்ளது.  இதில் நேற்று 122 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,740 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,454 பேர் குணமடைந்து மொத்தம் 30,72,895 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,28,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,653 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,89,994 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,293 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,872 பேர் குணமடைந்து மொத்தம் 28,28,983 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,872 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,43,040 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,838 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,475 பேர் குணமடைந்து மொத்தம் 24,83,676 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,843 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,48,592 ஆகி உள்ளது.  நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,199 பேர் குணமடைந்து மொத்தம் 19,11,812 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,571 பேர் சிகிச்சையில் உள்ளனர்.