இந்தியாவில் நேற்று 14,284 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

டில்லி

ந்தியாவில் நேற்று 14,284 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,81,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,284 அதிகரித்து மொத்தம் 3,40,81,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 165 அதிகரித்து மொத்தம் 4,52,321 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 19,577 பேர் குணமாகி  இதுவரை 3,34,31,716 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,89,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,715 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,91,697 ஆகி உள்ளது  நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,789 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,680 பேர் குணமடைந்து மொத்தம் 64,19,678 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 28,631 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 7,555 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,54,321 ஆகி உள்ளது.  இதில் நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,865 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,773 பேர் குணமடைந்து மொத்தம் 47,39,270 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 87,657 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 326 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,83,459 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,941 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 380 பேர் குணமடைந்து மொத்தம் 29,36,039 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,87,092 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,899 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,411 பேர் குணமடைந்து மொத்தம் 26,36,379 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 14,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 432 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,60,472 ஆகி உள்ளது.  நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,307 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 586 பேர் குணமடைந்து மொத்தம் 20,40,131 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,034 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article