கோவை
தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நேற்று கோவையில் ஹேப்பி ஸ்டிரீட் நடந்துள்ளது.
ஞாயிற்றுகிழமைகளில் தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நேற்று கோவையில் 9-வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது. கோவை நகரில் உள்ள கொடிசியா பகுதியில் நடைபெற்ற இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கரகாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிகழ்வில் படம் வரைதல், கிரிக்கெட், காகித ராக்கெட், பம்பரம், பரமபதம், உடற்பயிற்சி ஆகியவையும் இடம்பெற்றன. அனைவரும் இசை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் ஆடி, பாடி மகிழ்ந்தனர். இந்த ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.