டில்லி

ந்திய ராணுவத்துடன் சீனா நடத்திய மோதலுக்குப் பிறகு சீனாவிடம் பிடிபட்டிருந்த 10 இந்திய வீரர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்தது.   இதற்குப் பதிலடியாக இந்தியாவும் படைகளைக் குவித்தது.  இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தது.  அவ்வகையில் சீனா கடந்த திங்கள் அன்று தனது படைகளை திரும்பப் பெற ஆரம்பித்தது.

அப்போது திடீரென சீனப்படையினர் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.  இதனால் இந்திய ராணுவ வீரர்கள் 20  பேர் உயிர் இழந்தனர்.  இந்த தாக்குதலில் ஆணிகள் பொருத்தப்பட்ட கட்டைகளை சீனா பயன்படுத்தியது குறித்து தகவல்கள் வெளியாகின.   மோதலுக்குப் பிறகு நாடெங்கும் சீன எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியது.

சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் சீன பொருட்களின் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கக் கூடாது எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.    இந்த மோதலில் மரணமடைந்தோர் இறுதிச் சடங்கில் நாடெங்கும் பலர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.  இந்த தாக்குதலில் சீனாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளிவரவில்லை.

பேச்சு வார்த்தையின் போது சீனாவால் பிடிக்கப்பட்ட 10 இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.   அதன் அடிப்படையில் நேற்று இரவு சீன 10 இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது  இது குறித்து இந்திய ராணுவம் ஏதும் தெரிவிக்கவில்லை.  மாறாக இந்திய வீரர்கள் யாரும் இந்த தாக்குதலில் காணாமல் போகவில்லை எனச் செய்தி வெளியிட்டுள்ளது.