டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,80,413 ஆக உயர்ந்து 1,55,484 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 9,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,80,413 ஆகி உள்ளது.  நேற்று 85 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,484 ஆகி உள்ளது.  நேற்று 15,722 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,87,351 ஆகி உள்ளது.  தற்போது 1,33,086 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,52,905 ஆகி உள்ளது  நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,415 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,107 பேர் குணமடைந்து மொத்தம் 19,70,053 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 30,265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,281 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,88,656 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,937 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,692 பேர் குணமடைந்து மொத்தம் 9,20,539 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 430 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,44,057 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,251 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 340 பேர் குணமடைந்து மொத்தம் 9,25,829 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 87 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,692 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,161 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 79 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,678 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 853 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 481 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,43,690 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,402 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 490 பேர் குணமடைந்து மொத்தம் 8,26,994 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.