டில்லி

ந்தியாவில் நேற்று 62,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,176 அதிகரித்து மொத்தம் 2,96,32,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,539 அதிகரித்து மொத்தம் 3,79,601 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,07,710 பேர் குணமாகி  இதுவரை 2,83,80,634 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 8,60,362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 7,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,24,773 ஆகி உள்ளது  நேற்று 1,458 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,14,154 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,176 பேர் குணமடைந்து மொத்தம் 56,69,179 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,38,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,041 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,77,010 ஆகி உள்ளது  இதில் நேற்று 115 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,148 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 14,785 பேர் குணமடைந்து மொத்தம் 25,81,559 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,62,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,246 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,48,205 ஆகி உள்ளது.  இதில் நேற்று 166 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,509 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,536 பேர் குணமடைந்து மொத்தம் 26,23,904 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,12,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 11,805 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,78,298 ஆகி உள்ளது  இதில் நேற்று 267 பேர் உயிர் இழந்து மொத்தம் 30,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,207 பேர் குணமடைந்து மொத்தம் 22,23,015 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 5,741 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,20,134 ஆகி உள்ளது.  நேற்று 53 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,052 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,567 பேர் குணமடைந்து மொத்தம் 17,32,948 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 75,134 பேர் சிகிச்சையில் உள்ளனர்.