டில்லி
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் வரலாறு அளவுக்கு 3,54,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சமாக 3,54,533 பேர் அதிகரித்து மொத்தம் 1,73,06,300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,806 அதிகரித்து மொத்தம் 1,95,116 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,18,561 பேர் குணமாகி இதுவரை 1,42,96,640 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 28,07,333 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 66,191 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,95,027 ஆகி உள்ளது நேற்று 832 பேர் உயிர் இழந்து மொத்தம் 64,760 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 61,460 பேர் குணமடைந்து மொத்தம் 35,30,060 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,98,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 28,469 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,39,201 ஆகி உள்ளது. இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,111 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,122 பேர் குணமடைந்து மொத்தம் 11,81,324 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,18,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 34,804 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,39,201 ஆகி உள்ளது இதில் நேற்று 143 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,426 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,982 பேர் குணமடைந்து மொத்தம் 10,62,594 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,62,162 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 35,311 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,86,625 ஆகி உள்ளது. நேற்று 206 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,165 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 25,633 பேர் குணமடைந்து மொத்தம் 7,77,844 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,97,616 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 15,659 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,81,988 ஆகி உள்ளது இதில் நேற்று 82 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,557 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,065 பேர் குணமடைந்து மொத்தம் 9,63,251 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,05,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.