டில்லி

ந்தியாவில் 19,35,180 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,17,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,532 பேர் அதிகரித்து மொத்தம் 3,82,18,773 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 4,87,693 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2,23,990 பேர் குணமடைந்து இதுவரை 3,58,07,029 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 19,24,051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரானால் 8,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இந்தியாவில் 73,38,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 159,67,55,879 ஆகி உள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தும் கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,35,180 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 70,93,56,830 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,50,635 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 5,99,80,920 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.