ண்டன்

ங்கிலாந்து நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

 

உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.  இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.  இதில் இங்கிலாந்து நாடும்  ஒன்றாகும்  கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் பல கட்டுப்பாடுகளை விதித்தார். 

ஆயினும் இங்கிலாந்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.55 கோடி பேர் பாதிக்கப்பட்டு தற்போது  36.16 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் போரிஸ் ஜான்சன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சன் தற்போதுள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் வரும் 27 ஆம் தேதி முதல்முழுமையாக் அகற்றப்படும் என அறிவித்துள்ளார்.   இதன்மூலம் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை, பொது இடங்களில் நடமாடத் தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை, வகுப்பறைகளில் முகக் கவசம் கட்டாயமில்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இனி வீட்டிலிருந்து பணி புரியுமாறு அரசு மக்களைக் கேட்டுக் கொள்ளாது எனவும் அவரவர் தங்கள் அலுவலக்ம்  சென்று பணி புரியலாம் எனவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.   போரிஸ் ஜான்சனின் இந்த அறிவிப்பு நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.