டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,96,442 ஆக உயர்ந்து 1,52,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 13,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,05,96,442 ஆகி உள்ளது.  நேற்று 161 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,52,754 ஆகி உள்ளது.  நேற்று 17,229 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,45,092 ஆகி உள்ளது.  தற்போது 1,94,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,294 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,94,977 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 60,523 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,516 பேர் குணமடைந்து மொத்தம் 18,94,839 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 48,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 645 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,33,077 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,181 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 807 பேர் குணமடைந்து மொத்தம் 9,13,012 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 179 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,57,381 ஆகி உள்ளது  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 231 பேர் குணமடைந்து மொத்தம் 8,77,443 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,186 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,57,381 ஆகி உள்ளது.  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,507 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,296 பேர் குணமடைந்து மொத்தம் 7,83,393 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,31,866 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,281 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 772 பேர் குணமடைந்து மொத்தம் 8,14,098 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.