டில்லி

ந்தியாவில் நேற்று 10,98,611 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,765 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,06,541 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 477 அதிகரித்து மொத்தம் 4,69,724 பேர் உயிர் இழந்துள்ளனர்.   24 மணி நேரத்தில் 8,548 பேர் குணமடைந்து இதுவரை 3,40,37,054 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 99,763 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தும் கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,98,611 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 64,35,10,926 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,00,562 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 5,34,70,909 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.