ஏமன்:
மன் நாட்டில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் வசிக்கும் பல மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து நிதி உதவி மற்றும் இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலரும் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும். இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்வை ஏற்பாடு செய்த இரு வணிகர்களை கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹூதிகளால் நடத்தப்படும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.