மராவதி

ர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்தின் வெற்றி என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

எடியூரப்பாவை கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்குக் கோர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   தனக்கு பெரும்பான்மை கிடையாது என்பதை அறிந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே தனது பதவிய ராஜினாமா செய்தார்.   அதை ஒட்டி கர்நாடக ஆளுனர் மஜத தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க அழத்தார்.   வரும் 23 ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “எடியூரப்பாவின் ராஜினாமா ஜனநாயகத்தின் வெற்றி ஆகும்.  ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒரு முதல்வராக நான் இந்த நிகழ்வை வரவேற்கிறேன்.   நாட்டில் உள்ள அனைவருமே தற்போது எடியூரப்பாவின் ராஜினாமாவினால் மனம் அடைந்துள்ளனர்.

பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இணைந்து கர்நாடகாவில் ஜனநாயகத்தை அழ்க்க முயன்றுள்ளனர்.   அவர்கள் இருவரும் இளைஞர்கள் கையில் இந்தியாவை ஒப்படைப்பது நல்லது.   பிரதமர் ஊழலை ஒழித்து சுவிஸ் வங்கியில் இருந்து கருப்புப் பணத்தை கொண்டு வருவதாக வாக்களித்தார்.   ஆனால் ஒரு ஓட்டுக்கு ரூ. 10000 என முடிவு செய்து ஊழலை அதிகரித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.