இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 18 டெஸ்ட் போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையால் ஆசிய அளவில், குறைந்த போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.

511015-yasir-shah-r-ashwinதுபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் முதல், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 17 டெஸ்ட் போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளைக் கடந்து, ஆசிய அளவில் அஸ்வின் செய்த சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல் உலகளவில் குறைந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் சார்லி டர்னர், சையது பர்னஸ் மற்றும் கிளாரி கிரிம்மெட் ஆகியோருடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் லாஹ்மேன் 16 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட் பெற்று உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். ஜார்ஜ் லாஹ்மேன் 1886ஆம் ஆண்டு படைத்த இந்த சாதனையை இன்னும் எவராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.