காய்கறி விற்பவரின் மகனாக இருந்து பாகிஸ்தானின் நேஷனல் டீமில் இடம்பெற்றிருக்கிறார் 21 வயதான் யாசிர் ஜான். இவரது சிறப்பம்சம் என்ன தெரியுமா? இவரால் இரு கைகளாலும் துல்லியமாக வேகபந்து வீசமுடியும்.
தனது வலது கையால் 145 கிலோமீட்டர் வேகத்திலும், இடது கையால் 135 கிலோமீட்ட வேகத்திலும் இவரால் துல்லியமாக பந்து வீச முடியும். இது கைகளிலும் ரிவர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்விங் இரண்டுமே இவருக்கு சாத்தியம். இவரது திறமையைப் பார்த்து கிரிக்கெட் வல்லுநர்கள் மலைத்துப் போய் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட லாகூர் டீமுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் அசாத்திய திறமைசாலி என்று புகழுகிறார் இவரது பயிற்சியாளரான முகமது சல்மான்.
கிரிக்கெட்டில் ஒரு ஓவரை ஒரு பந்து வீச்சாளர் இரு கைகளில் எந்த கையையும் பயன்படுத்தி பந்து வீசலாம். இதற்கு எந்த வரைமுறையும் இல்லை. எனவே ஒரே ஓவரில் வலது கை பேட்ஸ்மேனுக்கும் இடது கை பேட்ஸ்மேனுக்கும் இவரால் அசாத்தியமாக தனது இரு கைகளையும் பயன்படுத்தி மாற்றி மாற்றி பந்துவீசி அவர்களை திணறடிக்க முடியும்.
இவர் பாகிஸ்தான் முன்னாள் வேகபந்து வீச்சாளர்களான வக்கார் யூனுஸ் மற்றும் வாசீம் அக்ரமின் தீவிர ரசிகர். சிறு வயதில் இருந்தே நான் இருவரின் பந்து வீச்சையும் பார்த்து வருகிறேன் இருவரையும் எனக்கு முன்மாதிரிகளாக கருதுகிறேன் என்கிறார் யாசிர்.
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதுதான் தனது லட்சியம் என்கிறார் யாசிர்.