காஷ்மீரை உணர்வு ரீதியாக இழந்துவிட்டதாக பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பகுதிக்கு நேரில் சென்று பார்த்தால் அம்மக்கள் இந்தியா மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டதை நாம் உணர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் நிலவரத்தை தான் நேரில் சென்று அறிந்த நிலையில் அது குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டதாகவும் ஆனால் 10 மாதகங்களாக அவர் ஒப்புதல் தரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் தன்னை இவ்வாறு நடத்தியத்தியதில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார் சின்ஹா.
மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசை, அக் கட்சியைச் சேர்ந்த சின்ஹா உட்பட சில தலைவர்களே சமீபகாலமாக கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.