தென் ஆப்பிரிக்காவில் விலங்குகளிடையே புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

இதற்கு நியோ-கோவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது, மனிதர்களிடம் இதுவரை இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.

இருந்தபோதும், இன்னும் ஒரே ஒரு உருமாற்றம் தான் பாக்கி, அது நடந்துவிட்டால் இதன் தொற்று வேகம் அதி தீவிரமாக இருக்கும் என்றும் மூன்றில் ஒருவர் மரணமடைவது நிச்சயம் என்றும் சீனாவில் உள்ள வுஹான் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விலங்குகளிடம் மட்டுமே இந்த வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் இது மனிதர்களுக்கு தொற்றும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2019 ம் ஆண்டு வுஹானில் கண்டறியப்பட்ட சார்ஸ் கோவ்-2 வகையைப் போன்றே இதுவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ள நிலையில், இது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.