சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசியால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், அத்யாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் இருக்கும் மக்களுக்கு ரேஷன் பொருட்களும், தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமும் தரப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மிகவும் மோசமான நிலையில் அரிசி வழங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.