சிட்னி

லகின் நம்பர் ஒன் வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி டென்னிஸ் இல் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் வென்றார். அன்று முதல் இவருக்கு டென்னிஸ் உலகில் ஏறுமுகமாகவே இருந்தது. சென்ற ஆண்டு விம்பிள்டனில் வெற்றி பெற்று தாம் இந்த நம்பர் ஒன் என்னும் இடத்துக்கு தகுதியானர் என்பதை ஆஷ்லே நிரூபித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த 44 ஆண்டுகளில் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்னும் பெருமையை அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது 25 வயதாகும் ஆஷ்லே ஊடகங்கள் மூலம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“நான் டென்னிஸில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு என்னைப் பொறுத்தவரை உணர்ச்சிகரமானதும் மிகவும் கடினமானதும் ஆகும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, நாம் ஒன்றாக உருவாக்கிய இந்த நினைவுகளுக்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்”

எனத் தெரிவித்துள்ளார்.