கம்போடியா:

லகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாப் நட்சத்திரமான செர் பல ஆண்டுகளாக கூச்சலிட்டு பிரச்சாரம் செய்ததை தொடர்ந்து உலகின் தனிமையான யானை காவன் நேற்று பாகிஸ்தானிலிருந்து கம்போடியா சரணாலயத்திற்கு ஓய்வு பெறுவதற்காக கிளம்பியது.

புகழ்பெற்ற பாடகியும் ஆஸ்கார் விருதை வென்ற நடிகையுமான செர் அண்மைக்காலங்களில் இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் காவனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதிக எடை கொண்ட 36 வயதான காவன் பல ஆண்டுகளாக தனிமையில் இருந்து வருகிறது.

இதைப்பற்றி பாடகியும் நடிகையுமான செர் தெரிவித்துள்ளதாவது: இவ்வளவு நாளாக இதைப்பற்றி கனவு கண்ட என் விருப்பம் இறுதியாக நிறைவேறியது என்று தெரிவித்துள்ளார், இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையிலிருந்து வரும் காவன் இனி எப்பொழுதும் எங்களுடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் சரணாலயத்தில் காவன் என்னும் யானை தனியாக தவித்து வந்தது, தனிமையின் காரணமாக காவனுக்கு அடிக்கடி மதம் பிடித்தது, பல விலங்கு நல ஆர்வலர்களின் போராட்டத்திற்கு பின்பு நேற்று விடுதலை செய்யப்பட்ட காவன் கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.