500 கிலோ எடையுள்ள பெண் மும்பை வருகை: விமானத்திலிருந்து கிரேன்மூலம் இறக்கினர்.  

Must read

மும்பை:

லகிலேயே அதிக உடல்பருமன் கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்காக இன்று மும்பை வந்தார். கிரேன் மூலம் அவரை தூக்கி கனரக வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த 36 வயதுள்ள பெண் இமான் அகமது. இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. தற்போது 500 கிலோ எடையுள்ள இந்தப்பெண், உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் அதில் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் மும்பை மருத்துவமனை ஒன்று உடல் எடை குறைக்கும் மருத்துவ சிகிச்சையை மிகச்சிறப்பாக செய்து வருவதாக அவருக்கு தெரியவந்தது.

உடனே அந்தப்பெண் மும்பைக்கு பறந்து வந்துள்ளார். இன்றுகாலை மும்பை விமான நிலையத்துக்கு அவரது விமானம் தரையிறங்கியதும், கிரேன்மூலம் அவர் இறக்கப்பட்டார். அங்கிருந்து பெரிய கண்டெய்னரில் படுத்தபடி போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்காக சிறப்பு படுக்கை,  கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார். இவருக்கு உதவியாக அ்வரது சகோதரி சைமா வந்துள்ளார்.

உடல்பருமன் காரணமாக 25 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த இந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியே வந்தது இதுவே முதல்முறை.

 

 

More articles

Latest article