வாஷிங்டன்

ன்று வரை உலக அளவில் 15.22,70,255 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தற்போது பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.   இந்தியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி உள்ளன.  முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளரக்ள், கொரோனா முன் நிலை பணியாளர்கள், முதியோர் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது..

அகில உலக அளவில் 15,22,70,255 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 56,42,714 கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   இதில் அமெரிக்கா முதல் இடத்திலுள்ளது.  இங்கு மொத்தம் 4,60,04,726 தடுப்பூசிகளும் தினசரி 15,73,075 தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.  அடுத்ததாக சீனாவில் 4,05,00,000 தடுப்பூசிகளும் தினசரி 16,50,000 தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பிரிட்டனில் ஆறாம் இடத்தில் இந்தியா உள்ளது.  இந்தியாவில் இதுவரை 66,11,561 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இந்தியாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேல், அரபு அமீரகம், பிரேசில் ஜெர்மனி,  ஆகிய நாடுகள் உள்ளன.