ஜோகன்னஸ்பர்க்:
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை உருமாற்றம் அடைந்த கரோன வைரஸுக்கு அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு செயல்படாத காரணத்தால் அதனை பயன்படுத்துவதை நிறுத்த தென் ஆப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்துக்கு பதிலாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.